Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மழை முடியும் வரை இலவசம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல்வரும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். மேலும் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |