சோனியா காந்தி குடும்பத்தை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி இல்லை என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற பிஜேபி தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிஜேபி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை மையமாக கொண்டு இயங்கவில்லை என்றும் சேவையையும், அர்ப்பணிப்பையும், மையமாகக்கொண்டு இயங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சோனியா காந்தி குடும்பத்தினர் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்து இருப்பதாகவும், ஆனால் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் அதுபோன்ற தியாகங்களை செய்யவில்லை என்று கூறினார். மகாத்மா காந்தியும் காங்கிரசும், சுதந்திரத்திற்காக போராடி கொண்டிருந்தபோது பிஜேபியும் ஆர்எஸ்எஸ்-ம் வெள்ளையர்களே ஆதரித்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். எனவே சோனியாகாந்தி குடும்பத்தை பற்றி பேச பிரதமர் மோடிக்கோ பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் -கோ தகுதி இல்லை என்றும் அவர் கூறினார்.