டெல்லியில் காற்று மாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கவுதம் கம்பீர் ஜாலியாக கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றதால் இணையவாசிகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீபகாலமாக டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இக்குழுவின் உறுப்பினறும், டெல்லி கிழக்கு தொகுதி எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இந்திய அணி விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு காற்று மாசு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கவுதம் கம்பீர் இந்திய அணியின் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்திற்கு சென்று ஜாலியாக ரசித்து இனிப்பு சாப்பிட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதனை இணையவாசிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை கூறி வருகின்றனர். அதில் ஒருவர், “கடந்த வாரத்தில் காற்று மாசு குறித்தும், அதற்காக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்த கவுதம் கம்பிர், இன்று கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஜாலியாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருவர் கம்பீரை காணவில்லை என்று போஸ்டர் ஓட்டும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் ட்விட்டரில் #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
https://twitter.com/rohithumour/status/1195289510554173440
*Delhi is Choking
*Gautam ; So what 🙀 #ShameOnGautamGambhir pic.twitter.com/WLqwv9SNPM— Aarti (@aartic02) November 15, 2019
Gautam Gambhir was informed on 8th November, well in advance about Meeting on Pollution but he chose to skip it because Cricket Commentary was more important than Delhi Choking. #ShameOnGautamGambhir pic.twitter.com/rZEHJFivQe
— Aarti (@aartic02) November 15, 2019