Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு துணைப் பிரதமர் ஆசை ? பற்ற வைத்த அண்ணாமலை…. தமிழக அரசியலில் பரபரப்பு …!!

துணை பிரதமராக வேண்டும் என்கிற ஆசையில் முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை முக. ஸ்டாலின் விட்டுக் கொடுத்துவிட்டு சினிமா காமெடியனை போல் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோபாலபுரத்தில் ஆட்டம் பாஜகவிடம் செல்லாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கோபாலபுரம் குடும்பத்துக்கும், சன்டிவி நண்பர்களுக்கும், இதன் மூலமாக என்ன சொல்கின்றேன் என்றால், இந்த டைம் உங்கள் பருப்பு வேகாது. தப்பு செய்து விட்டீர்கள். மன்னிப்பு கேட்க வேண்டும். விடமாட்டோம். இதை சன் டிவி, கலைஞர் டிவி, கோபாலபுரம் குடும்பமும் எப்படி வேண்டுமென்றாலும் திருப்புவதற்கு முயற்சி செய்யுங்கள். தவறு செய்துள்ளீர்கள். பின்னாடி மண்டியிட்டு உள்ளீர்கள். எங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளீர்கள்.

கேரளா அரசு நம்மை அவமானப்படுத்தி இருக்கிறது. அதற்கு முதலில் உங்களுடைய முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் பத்திரிக்கை நண்பர்கள் கேட்கின்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கின்றோம். இந்த திராணி உங்களிடம் இருக்கிறதா. நீங்கள் சென்று திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் இதே கேள்வியை கேட்டு அவரிடமிருந்து மன்னிப்பு வாங்குகின்ற திராணி உங்களுக்கு இருக்கிறதா ? என்று அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள் என அண்ணாமலை கூறினார்.

Categories

Tech |