இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அன்று இரவு திடீரென தொலைக்காட்சியில் பிரதமர் மோடி தோன்றி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
மேலும் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இது ஒரு பேரழிவு நடவடிக்கையாகும். அந்த திட்டம் வெற்றிகரமானதாக இருந்திருந்தாலும் ஊழல் ஏன் நிற்கவில்லை? என்றும், கருப்புப் பணம் திரும்ப வரவில்லை? மற்றும் விலைவாசி கட்டுக்குள் வரவில்லை? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.