தமிழகத்தில் நவம்பர் 8ஆம் தேதி வரை கொரோனாவுக்கு 36,200 பேர் பலியாகி இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா முதல் அலையில் தப்பிப் பிழைத்த இந்தியர்கள் அலட்சியப் போக்கால் இரண்டாம் அலையில் நாள் ஒன்றுக்கு லட்ச கணக்கில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நிரம்பி வழிந்தன. உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதற்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முன்வரவில்லை.
தமிழ்நாட்டில் திமுக தேர்தல் நேர வாக்குறுதியின் படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதையடுத்து கருணா உயிரிழப்புகள் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை மத்திய மாநில அரசுகள் ஏற்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்றுவரை கொரோனாவால் தமிழகத்தில் 36,200 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 50 ஆயிரம் இழப்பீடு வழங்க இருப்பதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக நிவாரணம் வழங்குவது குறித்த தமிழக அரசு தகவல் தெரிவிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.