தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநராட்சி மண்டலம் 1-க்கு சரவண் குமார் ஜடாவத், மண்டலம் 2-க்கு பி.கணேசன் (9842185758, 044-24952414), மண்டலம் 3-க்கு சந்தீப் நந்தூரி (9940022220, 044-25333555), மண்டலம் 4-க்கு டி.ஜி.வினய் (9342714506, 044-28511210), மண்டலம் 5-க்கு மகேஸ்வரி ரவிக்குமார் (9952553355), மண்டலம் 6-க்கு எம்.பிரதீப்குமார் (9566084473), மண்டலம் 7-க்கு எஸ்.சுரேஷ்குமார் (944547 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்7820, 044-28544545), மண்டலம் 8-க்கு எஸ்.பழனிசாமி (9443176657, 044-25674620), மண்டலம் 9-க்கு கே.ராஜமணி (9445021688, 044-28522113), மண்டலம் 10-க்கு எம்.விஜயலட்சுமி (9444034855, 044-25676902) மண்டலம் 11-க்கு கே.இளம்பாவத் (9499973445, 044-29510802), மண்டலம் 12-க்கு எல்.நிர்மல்ராஜ் (9443133762, 044-22501158), மண்டலம் 13-க்கு எஸ்.மலர்விழி (9489900200, 044-29520142), மண்டலம் 14-க்கு எஸ்.சரவணன் (8012588602, 044-24311354), மண்டலம் 15-க்கு கே.வீரராகவ ராவ் (8903969999, 044-22501525).