சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையில் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, பொன்னேரி துரைநல்லூர் பகுதி : கவரபோட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், புலிகட், திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மாலை 4 மணிக்குள் மின்வினியோகம் கொடுக்கப்படும்.
மேலும் சென்னையில் கனமழை காரணமாக வெள்ள நீர் வடியாமல் இருந்ததால் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு இருந்தது. அந்தப் பகுதிகளில் இன்று மாலைக்குள் மீண்டும் மின் வினியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.