Categories
தேசிய செய்திகள்

நாய்க்கு கூட இரங்கல் செய்தி சொல்றாங்க…. ஆனால் விவசாயிகளுக்கு…. ஆளுநர் சத்ய பால் மாலிக்…!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், “டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு நாய் செத்தால்கூட இரங்கல் தெரிவிக்கிறார்கள். இந்த சூழலில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 600 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஒரு வார்த்தைகூட இரங்கல் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர்தான் அகங்காரம் பிடித்து அலைகிறார்கள்.

நான் இப்படிப் பேசுவதால், என்னுடைய பதவி பறிபோகும் என்பது குறித்தும், ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்படுவேன் என்பது குறித்தும் எனக்கு கவலையில்லை. எப்போது என்னை பதவியிலிருந்து விலகக் கூறினாலும் நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். டெல்லியில் போராடும் விவசாயிகள் வெறும் கைகளோடு வரமாட்டார்கள், வெற்றியுடனே வர விரும்புவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |