தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழக புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனவுகள் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகின்ற 10ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் அதிக மழை பெய்யும் மற்றும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.