Categories
மாநில செய்திகள்

#BREAKING: மாணவர்களே…. 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் லீவு!!

தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. இதற்கிடையே வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது..

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய 2  தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளது அரசு.

மேலும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) ஒருநாள் மட்டும் ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

Categories

Tech |