செல்போன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலக்கரைப்பட்டி பகுதியில் சங்கிலி பூதத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் கடைசி மகன் வெட்டும் பெருமாள் என்பவர் அவருக்கு சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் வெட்டும் பெருமாளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ரெட்டியார்பட்டி பகுதியில் பெண் பார்த்து பூ வைத்து விட்டு வந்துள்ளனர். இதனையடுத்து திருமணம் முடிவான நிலையில் வெட்டும் பெருமாள் வழக்கம் போல் கடைக்கு செல்வதற்காக குளித்துவிட்டு உடை மாற்ற தனது அறைக்கு சென்றுள்ளார்.
அதன்பின் வெட்டும் பெருமாள் உள்பக்கமாக கதவை பூட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வெட்டும் பெருமாள் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த சங்கிலி பூதத்தான் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை திறந்துள்ளார். அங்கு வெட்டும் பெருமாள் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மூலக்கரைப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று வெட்டும் பெருமாளின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.