Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்தலில் கூறிய பொய் தகவல்கள்… தாய்க்கு எதிராக மகள் மனு… பதவி நீக்கம் செய்ய வேண்டும்…!!

தேர்தலில் பொய்யான தகவல்களை கூறி வெற்றி பெற்ற ஊராட்சிமன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சடயனேந்தல் ஊராட்சி மன்ற தலைவராக மல்லிகா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார் இவரது மகள் கயல்விழி சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் சடயனேந்தல் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கும் மல்லிகா தேர்தல் நேரத்தில் மனு தாக்கல் செய்த ஆவணங்களில் அவரது படிப்பு, வருவாய், சொத்து மதிப்பு ஆகியவற்றை பொய்யான தகவல்களை அளித்துள்ளனர். இதனையடுத்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியது சட்டப்படி குற்றமாகும். எனவே சடையனேந்தல் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்று பதவி வகித்துவரும் மல்லிகாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் இருந்துள்ளது.

Categories

Tech |