சென்னையில் வசிப்பவர் சுரேஷ்(28). டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த 43 வயதான கணவனை இழந்த பெண் ஒருவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களின் உறவில் திடீரென்று விரிசல் ஏற்பட்ட்டுள்ளதால் அந்த பெண் வேறு சில ஆண்களுடன் பேசியுள்ளார். இதை பார்த்து வேதனையடைந்த சுரேஷ் அதை பற்றி கேட்டதற்கு அந்த பெண் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இதனால் சுரேஷ் சம்பவத்தன்றுய் திருமங்கலம் பகுதியில் திடீரென தீக்குளித்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..