Categories
அரசியல் மாநில செய்திகள்

காமெடி செய்த ஸ்டாலின்…! பதில் கேட்ட அண்ணாமலை… திமுக தப்பிக்க முடியாது …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முழுமையாக தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்திருப்பது மாநிலத்தின் முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் துணை பிரதமராக வருவதற்கு கனவு காண்கிறார். அதற்காக மட்டும்தான் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளாரே தவிர வேறெதுவும் கிடையாது. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரச்சனையை சரி செய்ய வேண்டும். முதலமைச்சர் பண்ண காமெடி…. எனக்கு மிக மிக அசிங்கமாக இருக்கிறது. மக்களுக்கு மிகுந்த கோபத்தை அளிக்கிறது.

எங்களுடைய முதலமைச்சர் ஒரு சினிமாவில் வருகின்ற காமெடி நடிகரை போல கேரளத்தினுடைய முதலமைச்சருக்கு நன்றி கூறி இருக்கிறார். எதற்கு ? பேபி அணை பக்கத்திலுள்ள மரங்களை வெட்டுவதற்கு. கேரளத்தினுடைய முதலமைச்சர் அதற்கு பதில் கடிதம் போடுகிறார். மரத்தை வெட்டுவதற்கு நாங்கள் அனுமதியே கொடுக்கவில்லை என்று. அதனால் முதலமைச்சரினுடைய தனிப்பட்ட சொத்து தமிழகம் கிடையாது. எந்தக் கடிதம் எழுதினாலும் கூட 8.50கோடி தமிழர்களின் சார்பாக அந்தக் கடிதத்தை எழுதுகிறார்.

எதையுமே தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், கேரளத்தினுடைய முதலமைச்சருக்கு 10 மரத்தை வெட்டுவதற்கு நன்றி கூறி நாம் அசிங்கப்பட்டு இருக்கிறோம். நான் கேட்பது 3 கேள்விகள் மூன்றும் நெத்தியடி கேள்விகள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முதலமைச்சருக்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

காவிரியிலிருந்து பிரச்சனையை தீர்த்திருப்பது பாரத பிரதமர். மேகதாது அணை கட்டுவதற்கு எந்த மாநிலமும் சம்மதமில்லாமல் கட்ட முடியாது என்று பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி என்னுடைய கேபினெட் மினிஸ்டர் பதில் கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் எக்ஸ்பெர்ட் கமிட்டி அரசாங்கத்தில் Cwc யில் போட்ட அனைத்து கமிட்டியும் அணை தெளிவாக உள்ளது என்று கூறிய பின்னர், எதற்காக மத்திய அரசை இருக்கிறீர்கள். இதில் திராவிட முன்னேற்றக் கழகம் தப்பிக்க முடியாது. தப்பிக்க விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |