தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சாவூர்,மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய 2 தேதிகளில் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளை சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.