ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள அ.ரெங்கநாதபுரம் பகுதியில் போதுமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வாடிப்பட்டி அருகே உள்ள 18ஆம் கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கால்வாய் அருகே நின்று கொண்டிந்தபோது திடீரென கால் தவறி கால்வாயில் விழுந்துள்ளார். இதனையடுத்து தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்து உயிரிழந்துள்ளார்.
இதனைதொடர்ந்து போதுமணி உடல் கால்வாயில் மிதப்பதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக ஜெயமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் போதுமணியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராவிர்க்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.