Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டாக வந்த ஸ்டாலின்…. நாங்க எல்லாம் அப்படி இல்லை….அல்லோலப்படும் சென்னை மக்கள்… சொல்லி காட்டிய ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  பெருமழை என்று சொன்னால் ஒரு மழைக்கே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு அவல நிலை. இந்த அரசனுடைய அவலநிலை வெட்டவெளிச்சமாக தெரிந்திருக்கின்றது. பொதுவாகவே மழைக்காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையம் கொடுக்கின்ற  அறிவிப்பின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக எல்லாவிதமான நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

அப்படித்தான் டிசம்பர் மாதம் பெருமழை பெய்த போது அம்மாவுடைய அரசைப் பொருத்தவரை எல்லா விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் பெருமளவு பாதிப்பில்லாத வகையிலே சென்னை நகர மக்களும், அதைப்போல தமிழ்நாட்டு மக்களும் செல்ல காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை என்று சொன்னால்…

ஒரு மழைக்கே இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு  தாங்கமுடியவில்லை.  ரெட் அலர்ட் வானிலை ஆராய்ச்சி மையம் கொடுத்தும் கூட அதை காற்றிலே பறக்கவிட்டு எந்தவித ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளான ஒரு மழைநீர் கால்வாய் தூர்வாருதல், அதைப்போன்று சத்துணவுக் கூடங்கள், சமுதாயக் கூடங்கள் இதையெல்லாம் சரிபடுத்தி ஒழுங்குபடுத்தி தயார் நிலையில் வைத்திருப்பது, அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே நீர்நிலைகளை தூர்வாருதல், மழைநீர் கால்வாய்களை முன்னெச்செரிக்கையாக தூர்வார வேண்டும்.

நீரேற்று நிலையங்கள் அதெல்லாம் மோட்டார் இயந்திரங்கள் எல்லாமே நூறு சதவீத அளவிற்கு அதனுடைய செயல்பாடுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பெருமளவில் மழைநீர் கால்வாய் தூர்வாரவில்லை, அதேபோன்று நீரேற்று நிலையங்கள் செயல்படுத்தப்படவில்லை,  ஜெனெரேட்டர் மோட்டார் என்று எதுவுமே வைக்கவில்லை.

மழை  அடித்த பிறகு பதினோரு மணிக்கு மேல தான்  மாண்புமிகு முதலமைச்சர், சில அமைச்சர் பெருமக்கள் வெளியே வந்து இருக்கிறார்களே ஒழிய அதற்கு உண்டான ஏற்பாடுகள் இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் ? பொதுவாகவே ஒரு ஏற்பாடும் செய்யாததன் காரணமாக இன்றைக்கு சென்னையை பொறுத்தவரையில் ஒரு வெள்ள காடாக மாறி விட்ட ஒரு நிலைமை சென்னை மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என குற்றம் சாட்டினார்.

Categories

Tech |