Categories
தேசிய செய்திகள்

வந்தது “குட் மார்னிங்” மெசேஜ்…. பறிபோனது ரூ.5 லட்சம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் “குட் மார்னிங்” என்று மின்னஞ்சல் வந்துள்ளது. இதை ஒரு பெண் அனுப்பியதாக நினைத்து அவரும் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் உரையாடி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அவர் அனுப்பிய முகவரிக்குச் சென்றுள்ளார். அப்போது விடுதி அறையில் மூன்று ஆண்கள் இருந்துள்ளனர்.

இதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அந்த மூன்று பேரும் காவல்துறை அதிகாரிகள் என கூறி அவரிடமிருந்த கிரெடிட் கார்டு, பர்ஸ், செல்போனை பறித்துக் கொண்டு அவரை அந்த அறையில் வைத்துப் பூட்டிவிட்டு மூன்று பேரும் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 5.91 லட்சம் வரை எடுத்துள்ளனர். இதை அறிந்த அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |