Categories
மாநில செய்திகள்

தண்ணீ குடிக்க முடில… சாப்பிட உணவு கொடுக்கல… அரசு எப்படி சமாளிக்க போகுதோ ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு முதலமைச்சர் தொகுதியாக இருக்கின்ற கொளத்தூர்  தொகுதியில் கூட சாக்கடை நீர்,  கழிவு நீர் எல்லாம் கலந்து குடிநீர் குடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறதெல்லாம் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்  கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல….  எல்லா தொகுதிகளும் இன்றைக்கு இருக்கும் நிலை…

புழல் ஏரி திறக்கப்படும் போது சரி ஒரு அறிவிப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான முன்னேற்பாடுகள் செய்வார்கள். என்னவென்றால் தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற மக்கள் எல்லாம் என்ன பண்ணுவார்கள் என்றால் சமுதாயக் கூடங்கள், அதேபோன்று சத்துணவு கூடங்கள், திருமண மண்டபம் போல இடங்களில் குடியமர்த்துவார்கள், குடியமர்த்துவதோடு மட்டுமல்லாமல் தேவையான உணவுகளும் அவர்களுக்கு பரிமாறப்படுவது வழக்கம். ஆனால் உணவும் பரிமாறவில்லை இதுவரையில்… எங்கேயும் உணவு கொடுத்த மாதிரி தெரியல.

அதேபோல தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றி அவர்கள் பாதுகாப்பாக  வாசிக்க சூழ்நிலையாக இருக்க கூடிய சத்துணவு கூடங்கள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் எவும் செய்யவில்லை. எனவே இப்படிப்பட்ட ஒரு அவல நிலை. ஒரு மழைக்கு தாங்காத இந்த அரசு பெருமழைக் எப்படி தாங்க போகின்றது? இதுதான் இன்றைக்கு சென்னை மாவட்ட மக்களளுடைய கேள்வி குறியாக இருக்கின்றது என தெரிவித்தார்.

Categories

Tech |