செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தோல்வி எதிர்பார்த்தது என்று சொல்லவில்லை, தோல்வி வந்ததினால் நாங்கள் சோர்வடையவில்லை, வெற்றி பெற வேண்டும் என்று தானே போட்டியிடுகிறோம், தோல்வியடைந்ததினால் நாங்கள் ஒன்னும் வெளியில் கிளப்பப்படும் செய்திகள் போன்ற சோர்வோ எதுவும் கிடையாது எப்பவும் போல தான் இருக்கிறோம். தேர்தல் முன்பு எப்படி இருந்தோமோ அதே மாதிரி தான் இருக்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தல் அப்போ இந்த ஒன்பது மாவட்டங்களில் ஆளுங்கட்சியாக இருக்கிறவர்கள் நிறைய அராஜகங்கள் செய்திருக்கிறார்கள். இது எதிர்பார்த்ததுதான். இதெல்லாம் பண்ணி தானே ஆட்சிக்கு வரணும் என்று நினைப்பார்கள், அது திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் நடக்கிறதுதான். அதை சொல்லி தோல்வி அடைந்து விட்டு அதை காரணமாக சொல்வது நான் ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை.
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த வி.கே.சசிகலா அவர்கள் மீண்டும் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறார்கள், தொண்டர்களை சந்திப்பேன் என்று கடிதம் எழுதியிருக்கிறார்கள் நீங்கள் இருவரும் சேர்ந்து அதிமுகவை மீட்பதற்காக வாய்ப்பு இருக்கா அல்லது இருவரும் தனித்தனியாக உங்கள் பாதை தொடருமா என்ற கேள்விக்கு,
சசிகலா அண்ணா திமுக பொதுசெயலாளராக இருக்கிற வழக்கு… பொதுக்குழுவே செல்லாது என்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கு. நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தொடங்கி ஜனநாயக ரீதியாக தேர்தலில் போட்டியிட்டு, தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சி தான் நாம் தான் அதிமுக கட்சியை மீட்டெடுப்போம் அப்படி என்று குறிக்கோளில் உள்ளேன். சில பேர் சொன்னாங்க கட்சியை மீட்டெடுப்பேன் என்றால் ஏன் கட்சி ஆரம்பிக்குறார் என்றால்…
அவங்களுக்கு தெரியும்…. கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்று தான் மீட்டெடுக்க முடியும் என்று நம்பி நாங்கள் அரசியல் களத்தில் உள்ளோம். அதே நேரத்தில் சசிகலா 4 ஆண்டு பெங்களூர் சிறையில் இருந்தவர்கள், அவர்கள் அப்போதிலிருந்து வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். 2017 செப்டம்பர் 12ஐ எதிர்த்து அப்பவே வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். வழக்கு தொடர்ந்தனால் அவங்க சட்ட ரீதியாக போய்கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.