சட்டவிரோதமாக பட்டாசு திரி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்காபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமமூர்த்தி என்பவரின் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமமூர்த்தியின் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமமூர்த்தியின் வீட்டில் 50 கிலோ பட்டாசு திரி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமமூர்த்தியிடம் இருந்த 50 கிலோ பட்டாசுத் திரியை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.