வேலைக்கு போகமுடியாமல் மனமுடைந்த தொழிலாளி விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு கீழே விழுந்து வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனைதொடர்ந்து வீட்டில் மயங்கி கிடந்த விஜயனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் விஜயன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.