அண்மையில் பேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி ரீ ப்ரண்ட் செய்திருந்தது.
தற்போது வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு மெட்டா தான் தாய் நிறுவனம்.
இந்நிலையில் மெட்டா தங்களது நிறுவனத்தின் பெயர் என்றும் அந்த பெயரை களவாடிய பேஸ்புக் மீது வழக்கு தொடர உள்ளதாகவும், அமெரிக்காவின் சிகாகோவில் இயங்கி வரும் டெக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. இதனை மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மேட்ச் கிளிக் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.