Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கவனக் குறைவின் காரணத்தினால்…. அடுத்தடுத்து நடந்த விபத்துகள்….. விருதுநகரின் பரபரப்பு….!!

சாலை விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் இருசக்கர வாகனத்தில் விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பாண்டியன் என்பவர் இன்று சக்கர வாகனம் பாண்டியர் சக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் நிலைதடுமாறி 5 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ள வரிகள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து திருக்குமரன் நகரில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரபாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் முத்தரையர் நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் வேல்முருகன் வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் வேல்முருகன் மற்றும் விக்னேஸ்வரபாண்டியன் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |