மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் கவன சிதறல்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று எதிர்பாராத இடமாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படக்கூடும்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் மன வருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான நிலை காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் ஆர்வமுடன் படிப்பீர்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்கள் செயல்களில் தைரியம் இன்று கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பண கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி முன்னேறி செல்லக்கூடும். விளையாட்டு துறையில் முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்துமே சிறப்பாக முடியும். அது மட்டுமில்லாமல் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
கவனம் என்பது எப்பொழுதுமே இருக்கட்டும். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு அன்பும் பாசமும் இருக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம். புதிதாக வீடு மனை வாங்க வேண்டும் என்ற யோசனை செய்தவர்களின் எண்ணம் நிறைவேறும். இன்று கூடுமானவரை நீங்கள் நினைத்தது நடக்கும். காரியங்களை மட்டும் கொஞ்சம் பொறுமையாக செய்யுங்கள் அது போதும். குடும்பத்தில் எந்த விதமான வாக்கு வாதங்கள் வேண்டாம்.
இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அனைத்து காரியங்களையும் நல்லபடியாக செய்து கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் பேச்சில் அன்பும் பண்பும் மிகுந்திருக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். தேவையற்ற மனக் கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும்.
பயணம் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் பிரச்சனை தலை தூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் செலவு கொஞ்சம் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். கூடுமானவரை பேச்சில் கவனம் இருக்கட்டும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணிகளில் சிரமம் கொஞ்சம் உருவாகலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் இருக்கட்டும். ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணி பற்றிய சிந்தனை அதிகமாகவே இருக்கும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமான பலன்கள் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் அடைபடும் நாளாகவும் இருக்கும். மற்றவர்களுக்கு கடனாக கொடுத்த பணம் மீண்டும் வந்து சேரும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களுக்கு இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு அளவில் போட்டிகள் இருக்கும். சராசரி அளவில் இன்று பணவரவும் கிடைக்கும். அரசு அனுகூலம் பெறுவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது மித வேகமாக செல்லுங்கள். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்பும் போது கவனமாக அனுப்புங்கள். உத்தியோகத்தில் சரியாக முடிவெடுக்க முடியாமல் கொஞ்சம் குழப்பம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று உடல் சோர்வாகக் காணப்படும். சக ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தினருடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். அதேபோல அக்கம்பக்கத்தினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். திருமணத்திற்காக முயற்சி செய்தவர்களுக்கு இன்று நல்ல சூழல் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும்.
இருந்தாலும் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சூரிய பகவானை மனதார நினைத்து இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
கன்னிராசி அன்பர்களே..!! இன்று எந்த செயலையும் நீங்கள் சவாலாக செய்வீர்கள். கடந்தகாலத்தில் திகைப்பு தந்த பணி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் போது அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னர் செய்யுங்கள். பொறுமையாக செய்யுங்கள். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.
வீண் அலைச்சலை குறைப்பதற்கு கொஞ்சம் நீங்கள் யோசனை செய்ய வேண்டும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டு பிரிய வேண்டியிருக்கும். உங்களின் பொருட்களை நீங்கள் மிகவும் கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும். வேளையில் கவனமுடனிருப்பது நல்லது. முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் தெய்வீக அருளைப் பெற்று மனம் நிம்மதியாக வாழுங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு மிகவும் சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று இஷ்ட தெய்வ அனுக்கிரகத்தை பெறுவீர்கள். செயல்கள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். வளர்ச்சி பாதையை நோக்கி அனைத்துமே செல்லும். பணபரிவர்த்தனையில் மட்டும் கவனம் இருக்கட்டும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். தாராள பணவரவு இன்று வந்து சேரும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாகவே இருக்கும். தந்தை மூலம் செலவு கொஞ்சம் உண்டாகும்.
வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மனதிற்கு திருப்தியை கொடுக்கும். உறவினரிடம் பக்குவமாகப் பேசுங்கள் அது போதும். வழக்குகளில் மெத்தனமான போக்கு தான் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். ஆனால் உதவிகள் வந்து சேரும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மனதில் ஒருவித கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதற்காக கவலைப் படுகிறோம் என்று தெரியாமலேயே கவலைப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
எதைப்பற்றியும் கவலை வேண்டாம். காரியங்களைப் பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு சிறப்புமிக்க வழிபாடாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! சிலர் பொறாமையினால் பரிகாசம் செய்யக்கூடும். அவரிடம் தயவுசெய்து விலகி இருங்கள். உங்களை குறை சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் இன்று விலகிச் செல்வார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற காலதாமதம் தான் ஏற்படும். அளவான பணவரவு இன்று கிடைக்கும். தயவு செய்து யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் தர வேண்டாம். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மையை சேர்த்துக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! உங்களின் சிரமம் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். கஷ்டமான சூழ்நிலை மெல்ல மெல்ல சரியாகும். யாரிடமும் உங்களுடைய ரகசியத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். இன்று சுமாரான அளவிலேயே பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். இன்று மனதில் எதை பற்றியாவது சிந்தனை வந்து கொண்டே இருக்கும். இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள் அது போதும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கொஞ்சம் திண்டாடக் கூடிய சூழல் இருக்கும். யாருக்கும் எந்தவிதமான வாக்குறுதிகளை தயவுசெய்து கொடுக்காதீர்கள். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக நடங்கள். கூடுமானவரை ஜாமீன் கையெழுத்து ஏதும் போடவேண்டாம்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடையில் செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களை சிறப்பு மிக்க நாளாக மாற்றி அமைத்துக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நல்லோரின் நட்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும். புதிய திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும், ஆன்மீக பணிகளில் ஈடுபடவும் தோன்றும்.
இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று தெய்வீக சிந்தனை அதிகமாக இருப்பதால், தெய்வத்திற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும். இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு இன்று சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை சிலர் குறை சொல்ல காத்திருக்க கூடும். செயல்களில் சுறுசுறுப்பை பின்பற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். இன்று தொழில் பிரச்சனை , கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். எதிலும் நன்மை உண்டாகும். கலை இலக்கியத்தின் மீது ஆர்வம் ஏற்படும். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். கலைத் துறையைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதனால் மகிழ்ச்சி ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் சிறப்பாகவே இருக்கும். பழைய பாக்கிகளும் வந்துசேரும். இன்று தன வரவை பொருத்தவரை எந்த வித பிரச்சனைகளும் இருக்காது. அதே போல் மாலை நேரங்களில் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள்.
இன்று மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று முக்கியமான பணி மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு அனைத்து விதமான சிறப்பையும் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாகவே பணிபுரிவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும். இன்று நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணத்தின் போது கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும்.
வியாபாரப் போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்புக்கள் இருக்காது. இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். அனைத்து விஷயங்களும் நீங்கள் எதிர்பார்த்தது போல் எளிமையாகவே நடந்து முடியும். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும். பிற மொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்