Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி செய்த செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சூதாட்டம் விளையாடிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திர ரெட்டியபட்டி கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வாலிபர்கள் சூதாட்டம் விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூதாட்டம் விளையாடிய சமயமுத்து, கருப்பசாமி, ரங்கராஜ் ஆகிய மூவரையும் பார்த்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் மூவரிடமும் இருந்த பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சமயமுத்து, கருப்பசாமி, ரங்கராஜ் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |