Categories
மாநில செய்திகள்

எல்லாமே ரெடியா இருக்கு…! மக்களே பயம் வேண்டாம்…. நம்பிக்கையூட்டிய தமிழக அரசு …!!

தமிழகத்தில் இன்று அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளும் அரசு தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை மீட்பு பணி தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் நேற்று மட்டும் பகலில் வடகிழக்கு பருவமழை 7.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது எனவும், நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூறினார்.

தற்போது வரை 48 நிவாரண முகாம்களில் 1120 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும் மழை நீர் தேங்கி இருக்கும் பகுதியில் ராட்சத மோட்டார் மூலம் மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு குறை சொல்வதை தவிர வேறு வேலை இல்லை எனவும், அவர்கள் ஆட்சியில் வெள்ளம் வந்தபோது 10 நாட்கள் வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது தெரியுமா என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நாளை அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளுடனும் அரசு தயார் நிலையில் உள்ளது என்றார்.

சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் நேற்று கனமழை பெய்தது 50 லிருந்து 60% மழைநீர் நேற்றே வடிந்துவிட்டது என்ற அவர் கொரட்டூர் மாம்பழம் பகுதிகளில் இன்றுக்குள் மழைநீர் முழுவதும் அகற்றப்படும் என்றார். நாளை, நாளை மறுநாள் அதிக மழைப் பொழிவு இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், தெரிவித்தார்.

Categories

Tech |