Categories
உலக செய்திகள்

இதுக்கெல்லாம் அவசியமே இல்ல..! குளிரூட்டப்படாத கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு..!!

புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று குளிர்பதன பெட்டியில் வைக்க அவசியம் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 3 கொரோனா தடுப்பூசிகளும் குளிர்பதன பெட்டியிலோ அல்லது குளிர்பதன அறையிலோ வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தடுப்பூசிகளை பராமரிக்கவில்லை என்றால் மருந்தின் செயல்திறன் குறைந்துவிடும். இந்த நிலையில் புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று குளிர்பதனப்பெட்டியில் வைத்து பராமரிக்க அவசியம் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது குளிர்பதனப் பெட்டியில் வைத்து பராமரிக்க அவசியம் இல்லாத புதிய கொரோனா தடுப்பூசி ஒன்றினை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த வகையில் இந்த புதிய கொரோனா தடுப்பூசி வைரஸின் முனைப்பகுதியில் இருக்கும் புரோட்டீனை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை தயாரிப்பது மிகவும் சுலபம் என்று கூறப்படுகிறது. இவை உருமாறிய வைரஸ் ரகங்கள் மற்றும் கொரோனாவை உருவாக்கும் வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இந்த தடுப்பூசி 7 நாட்கள் வரை அறை வெப்பநிலையில் வைக்கப்பட்டு பின் பயன்படுத்தப்படுகிறது.

அதுவரை செயல்திறன் மிக்கதாகவும், சீரான ஒன்றாகவும் தடுப்பூசி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வழிமுறையை மற்ற நோய்களுக்கான தடுப்பூசி உற்பத்திக்கும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் விஞ்ஞானிகள் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மருந்து நிறுவனங்களில் இந்த புதிய தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |