தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே சிவகங்கை,புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.