மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு அவர்களுக்கு இன்னும் தீர்வு அளிக்கவில்லை. இந்த நிலையில் திருச்சியில் தொடர்ந்து 29 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் எருமை மூலம் பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மழையால் அழிந்து வரும் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். லக்கிம்பூரில் விவசாயிகளை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர்.