Categories
உலக செய்திகள்

‘கடல்சார் திறன்கள் மேம்படுத்தப்படும்’…. போர்க்கப்பலை வழங்கிய சீனா…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்….!!

அதிநவீன போர்க்கப்பலானது பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடலில் சீனா தனது கடற்படை பலத்தை அதிகரித்து வருகிறது. மேலும் இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போர்க்கப்பல்  ஒன்றை வழங்கியுள்ளது.

இந்த போர்க்கப்பல் ஆனது சீனாவில் கப்பல் கட்டும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். இது ஷாங்காய் நகரில் நடைபெற்ற விழாவின்போது பாகிஸ்தான் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு ‘பிஎன்எஸ் துக்ரில்’ என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த கப்பல் அதிநவீன தற்காப்பு திறனுடன் கூடிய போர் மேலாண்மை உடையது.

மேலும்  கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு திறன்களை செம்மைப்படுத்தும் என்று பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு நான்கு அதிநவீன போர்க்கப்பல்கள் வழங்கப்படும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த இருநாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன் அடிப்படையில் தான் தற்பொழுது முதல் போர்க்கப்பல் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |