Categories
உலக செய்திகள்

‘சுழற்றியடிக்கும் சுழல் காற்று’…. கேமராவில் பதிவான அரிய காட்சி…. வானிலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்….!!

விமான நிலையத்தின் அருகே வீசப்பட்ட சுழல் காற்றானது கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை அன்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் வழியாக சுழல் காற்று சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு சுழல் காற்றானது முதல் முறையாக வான்கூவர் நகரில் தென்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

இந்த சுழல் காற்றானது வான்கூவர் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் சுமார் 24 நிமிடங்கள் நீடித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 1967 ஆம் ஆண்டு வான்கூவரில் இதே போன்றதொரு சூழல் காற்று உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளில் வான்கூவர் பகுதியில் 7 முறை சுழல் காற்று வீசப்பட்டுள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் நவம்பர் மாதத்தில் இது போன்றதொரு காட்சியை கண்டது மிகவும் அரிதான நிகழ்வாகும். இந்த அரியக் காட்சியானது கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |