தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகையாக 20,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் அதிமுக அரசு கொடுத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய அரசு முன் வரவேண்டும்.
இதனைப் போலவே மின்சார கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.வீடுகளில் தண்ணீர் புகுந்து அதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது அரசின் கடமை. இதனைப் போலவே வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பைப் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் அதனை மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும்.தமிழகத்தில் வெள்ள நிவாரண தொகை குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் ஓபிஎஸ் இது தொடர்பாக அறிக்கை விடுத்து இருப்பது கவனிக்கத்தக்கது. இதையடுத்து அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.