Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. அவசர உதவிக்கு இந்த எண்ணிற்கு அழைக்கலாம்…. டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை,தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படைகள் உள்ளன என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் சுமார் 75 ஆயிரம் காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். 350 கடலோர காவல்படை வீரர்கள் சிறு படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அவசர உதவிக்கு 044-28447701, 28447703 என்ற காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |