Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பத்துக்கு ரூ. 20,000 கொடுங்க…. OPS வலியுறுத்தல்…!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதி பட்டு கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல்  மழையை காரணமாக வைத்து காய்கறிகளின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 5000 நிவாரணம் வழங்கப்பட்டது. நிவாரணம் வழங்குவது அரசின் தலையாய கடமை. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் காய்கறிகளை மலிவு விலையில் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். மின்சார கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும். மழை நீர் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பு விரைந்து அளிக்க வேண்டும். வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |