கடகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணிகளில் சிரமம் கொஞ்சம் உருவாகலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் இருக்கட்டும். ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணி பற்றிய சிந்தனை அதிகமாகவே இருக்கும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமான பலன்கள் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் அடைபடும் நாளாகவும் இருக்கும். மற்றவர்களுக்கு கடனாக கொடுத்த பணம் மீண்டும் வந்து சேரும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்