Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“40 நாட்களாக தண்ணீர் வரவில்லை” நனைந்துகொண்டே மறியலில் ஈடுபட்ட மக்கள்…. கரூரில் பரபரப்பு….!!!

குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 1 மாதத்திற்கு மேலாக குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை தகவல் தெரிவிக்கப்படும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |