Categories
மாநில செய்திகள்

பொன்னாடை மற்றும் மலர்க்கொத்து தவிர்க்க வேண்டும்…. சசிகலா வேண்டுகோள்…..!!

தமிழகத்தில் அதிமுகவை மீட்டெடுப்பதற்காக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பை காட்டிவரும் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து அவர் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த கடிதத்தில், என்னை நேரில் சந்திக்க வரும் என் உயிர் தொண்டர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எனக்கு வழங்கும் மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை தவிர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அதனை தொடர்ந்து எனக்கு எதுவும் நீங்கள் செய்ய விரும்பினால், தாங்கள் வாழ்கின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை எளிய மக்கள், ஆதரவற்றவர்கள், வயதானவர்கள், கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்கள், வாழ்வாதாரத்தை இழந்து விட்டவர்கள் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். அந்த உதவிகளை நீங்கள் எனக்குத் தர நினைக்கும் சிறந்த பரிசாக மனதார ஏற்றுக் கொள்கிறேன். அது மட்டுமில்லாமல் நீங்கள் வாழும் இடத்திற்கு நேரில்  விரைவில் சந்தித்து இருக்கிறேன் என்று கூறினார்.

Categories

Tech |