நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.அதன்படி ஹரியானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அனுமதியை செயல்படுத்துவது அந்தந்த பள்ளிகள் எடுக்கும் இறுதி முடிவைப் பொறுத்தது.இப்போது பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும்போது முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பராமரித்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்கு செல்வதற்கு முன்பு அந்தந்த பள்ளிகளில் இருந்து தகவல் தொடர்புக்காக காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக அரியானாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அறிக்கைகளின்படி பள்ளிகளில் 45% வரை மட்டுமே அனுமதிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வருகின்ற டிசம்பர் 1-ஆம் தேதி முதல் முழுமையான திறனுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.