Categories
மாநில செய்திகள்

வீரமணி விரைவில் குணமடைய வேண்டுகிறேன்…. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்  திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  இதையடுத்து அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் வீரமணி மற்றும் அவரது மனைவி மோகனா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதித்தது கவலையளிக்கிறது.

இவர்கள் நோய்த்தடுப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்தும், வெளியூர் சென்று திரும்பிய ரயில் பயணத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே முகக் கவசம் உள்பட அனைத்து கொரோனா தடுப்பு நடைமுறைகளையும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் வீரமணி மோகனா ஆகிய இருவரும் விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |