துலாம் ராசி அன்பர்களே..!! இன்று இஷ்ட தெய்வ அனுக்கிரகத்தை பெறுவீர்கள். செயல்கள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். வளர்ச்சி பாதையை நோக்கி அனைத்துமே செல்லும். பணபரிவர்த்தனையில் மட்டும் கவனம் இருக்கட்டும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். தாராள பணவரவு இன்று வந்து சேரும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாகவே இருக்கும். தந்தை மூலம் செலவு கொஞ்சம் உண்டாகும்.
வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மனதிற்கு திருப்தியை கொடுக்கும். உறவினரிடம் பக்குவமாகப் பேசுங்கள் அது போதும். வழக்குகளில் மெத்தனமான போக்கு தான் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். ஆனால் உதவிகள் வந்து சேரும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மனதில் ஒருவித கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதற்காக கவலைப் படுகிறோம் என்று தெரியாமலேயே கவலைப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
எதைப்பற்றியும் கவலை வேண்டாம். காரியங்களைப் பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு சிறப்புமிக்க வழிபாடாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்