நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்தவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் பெண் கல்விக்காக இளம் வயதிலேயே குரல் கொடுத்தார். இதனால் அவர் தலீபான்களால் சுடப்பட்டு மீண்டும் உயிர் பிழைத்தார். மேலும் அவர் அமைதிக்கான நோபல் பரிசையும் இளம் வயதிலேயே பெற்றவர்.
இந்த நிலையில் 24 வயதான மலாலா யூசப்சாய்க்கு இங்கிலாந்தைச் சேர்ந்த அசீர் என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து மலாலா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்த நாள் எனது வாழ்வில் ஒரு பொன்னாள். நான் மிக சிறிய அளவில் என் குடும்பத்தினர் முன்னிலையில் அசீருடன் திருமண பந்தத்தில் இணையப்போகிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.