Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. பக்தர்கள்இன்றி…. இன்று கொடியேற்றம்…!!!!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை தீப திருவிழா நடைபெறும். மேலும் இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இந்த வருடம் கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதையடுத்து மலையில் ஏறி மகா தீபத்தை தரிசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திலேயே சாமி உலா நடைபெற இருக்கிறது.

இந்த வருட தீபத் திருவிழா பக்தர்கள் இன்றி கோவில் 3 ஆம்  பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் உள்ள 63 அடி உயர தங்க கொடி மரத்தில் தேவ மந்திரங்கள் முழங்க, இன்று கொடி ஏறியது. அதனால் சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள், அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வருகின்ற 19ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும் மாலையில் மகாதீபம் ஏற்பட உள்ளது.

Categories

Tech |