Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு…”மனைவி விரும்புவதை வாங்குவீர்”… சேர்ந்து எடுக்கும் முடிவு சிறப்பு..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நல்லோரின் நட்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும். புதிய திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும், ஆன்மீக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். அதற்கு ஏற்றார்போல் திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று தெய்வீக சிந்தனை அதிகமாக இருப்பதால், தெய்வத்திற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும். இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு இன்று சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |