மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமடைந்துள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.