உலகிலேயே முதன்முதலாக காலநிலை மாற்றத்தால் கனடாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் வசித்து வரும் 70 வயது பெண்மணி ஒருவர் உலகிலேயே முதல்முறையாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்மணியின் உடல்நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததையும் கனடாவின் கூட்டேனே லேக் மருத்துவமனையின் மருத்துவர் கைல் மெரிட் கூறியுள்ளார்.
எனவே உடல்நிலையும் மோசமடைந்ததால் அந்த பெண்மணி உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல போராட்டங்களை சந்திக்க நேரிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவின் சில பகுதிகளிலும், கனடாவிலும் இந்த ஆண்டு ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு அங்கு நிலவும் வெப்ப அலைகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் சுமார் 233 பேர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிக வெப்பம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.