கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் காவல்துறையினர் பாகல்பட்டி பிரிவு சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த கெட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார், சந்துரு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 450 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அசோக்குமார், சந்துரு ஆகிய 2 பேருக்கு கஞ்சா விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தும்பளப்பாடியை சேர்ந்த சின்னராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.