Categories
சென்னை மாநில செய்திகள்

நான் தான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்…. உங்கள் புகார் என்ன சொல்லுங்க?…. கண்ட்ரோல் ரூமில் திடீர் விசிட் அடித்த முதல்வர்….!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் உடனே செய்து தர வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல்வரே நேரடியாக களத்தில் இறங்கி மழை வெள்ள பாதிப்புகளை நேரில் கண்காணித்து மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தொடர்ந்து நான்காவது நாளாக இன்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் மக்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.அதில் மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கேட்டறிந்தார். திடீரென அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த ஒரு அழைப்பை தானே எடுத்து, சொல்லுங்க நான் தான் ஸ்டாலின் பேசுகிறேன், உங்களின் புகார் என்ன என்று கேட்க, எதிரில் இருந்த அவர் தனது புகாரை கூறியுள்ளார்.இதையடுத்து உங்களுக்கு அனைத்து உதவிகளும் உடனே வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Categories

Tech |