தமிழகத்தில் கன மழை பெய்து வருவதை தொடர்ந்து அடுத்து மீட்பு நிவாரண நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வரலாறு காணாத மழையால் சென்னை பெருநகரம் ஸ்தம்பித்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை அறிவித்துள்ளது.
எனவே தமிழகத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உதவி தேவை. ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேவையான நிதியை மத்திய நிதித்துறை அமைச்சகம் விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.